Wednesday 10 August 2016

‪#‎ஹைக்கூ‬ ‪#‎படிக்கட்டுகள்

வழக்கமாக காப்பக குழந்தைகளுக்கு அரிசி தேவை,உணவு,பாடப்புத்தகம், நோட்டு தேவைகள்,
கல்வி உதவி என்று பதிவிடுவோம்..
நண்பர்களும்,படிக்கட்டுகள் உறுப்பினர்களும் தம்மால் இயன்ற உதவிகளை செய்வார்கள்!
இந்த ஹைக்கூ நிகழ்விற்கு எவ்வாறு உதவுவது என்ன தேவை என்றெல்லாம் தொடர்ந்து மெயில் மற்றும் குறுஞ்செய்திகளில் நண்பர்கள் விசாரித்த வண்ணம் உள்ளனர்!
அனைவருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள்!
இந்த முறை அவர்கள் வேண்டுவதெல்லாம் அரிசியோ,பணமோ,கல்வி உதவியோ வேறு எதுவோ அல்ல!
இதுநாள் வரையில் திறமை இருந்தும் மேடைஏறிடாத அந்த பிஞ்சு உள்ளங்களுக்கு கரகோஷமும்,நாம் கொடுக்கும் உற்சாகமும் தான் தேவை 
நிகழ்விற்கு தாங்கள் வருவதே பெரிய உதவியாய் இருக்கும் 
தொடர்புக்கு : 9677983570,8438280058
‪#‎ஹைக்கூ‬ - காப்பக குழந்தைகளுக்கான கலைவிழா 
தேதி: 13/08/2016, சனி
நேரம் :  பகல் 3:00 முதல் மேடை நிகழ்வு
 காலை 11:00 முதல் OFF-STAGE நிகழ்வுகள்
இடம் : அசல் மலபார் ஹால், அவனியாபுரம்,
மதுரை.
https://www.youtube.com/attribution_link?a=jQoUMoCza7I&u=%2Fwatch%3Fv%3DEovg5Ozn7dw%26feature%3Dshare


https://www.facebook.com/Padikkattugal/videos/1196900323688672/



#HAIKOO #PADIKKATTUGAL

Dear All,
We Padikkattugal Team planned to Conduct an Talent-Fest for the Gifted Kids- who were born & brought up at Orphanage Homes.
Kindly consider this mail as our personal invite and make the day BiG for our gifted kids 
*Event Description*
‪#‎Haikoo‬- 'A Talent-Fest for Gifted Kids' is an event designed for 500+ Gifted Kids from different orphanages in and around Madurai..
We team Padikkattugal working for the betterment and development of Gifted Kids from 2012- Our main focus is on the individual care and support of the neglected/parent less children who had been brought-up in orphanage homes.
We planned to organize this #Haikoo because we believe that every gifted child have his/her own special talent but they have no luck on any stages. Padikkattugal's #Haikoo designs the opportunity to bring out their hidden potentials.
This event promises fun unlimited for the inmates of the orphanages.It will showcase the talents of the kids by making them perform on stage and awarding their potentials.
Do Join With Us 
Date : 13/08/2016, Saturday
Time : Off-Stage Programmes- 10.30 am onwards
Onstage Programme & Main Event - 3:00 PM onwards
Venue : Asal Malabar Hall,Avaniyapuram Bye-pass,Madurai
Contact: 9677983570, 9865427756
You can do your contributions in below ways !
As usual, we will send you the event details,photographs,bill receipts of the purchased,Spent items.
1.Lunch for 350 Kids
2.Dinner for 350 Kids
3.Certificates/Medals/Gift_Articles
4.Refreshment,Snacks Items for Kids
5.Dance/Drawing/Music class fee for the selected kids per Month/Year
You can provide the needs directly to the event co-ordinators or else can contribute by crediting to
Account Details:
Acc Name : PADIKKATTUGAL
Bank : State Bank of India
Branch : SME BRANCH,MADURAI
Acc no : 3272 744 9205
IFSC CODE : SBIN0000988
Acc type : Savings
Contact : 9677983570,9003364422,9865427756
All event details will me mailed .All proof of evidence about all requirements would be intimated in Facebook,Whatsapp and mail through Photographs & Thanks letter from each Homes.
Please send your details to padikkattugal@gmail.com and you can WhatsApp to 9677983570 if you want to get updates from us
Padikkattugal Facebook Page ---> https://www.facebook.com/Padikkattugal
To receive updates in Whatsapp Group
Ping to 9677983570,9003364422



‪#‎ஹைக்கூ‬ ‪#‎படிக்கட்டுகள்

மதுரையின் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஒரு மழலையின் வாய்வழி ஏக்கத்தை இங்கே பதிவு செய்கிறோம் !
"அண்ணே ! ஸ்கூல்-ல இருந்து வேற ஸ்கூலுக்கு பாட்டுப் போட்டி,டான்ஸ் போட்டி-ன்னு எல்லாம் மத்த பசங்க போவாங்க! ஆனா டான்ஸ்-க்கு ட்ரெஸ் எடுக்கணும்,போறதுக்கு வரதுக்கு செலவு-ன்னு போகாம இருந்துடுவோம்..
எனக்கும் நல்லா டான்ஸ் ஆட தெரியும் ! சூப்பராடிராயிங் பண்ணுவேன்..ஒரு வாட்டியாச்சும் பெரிய ஸ்டேஜ்-ல ஏறி டான்ஸ் ஆடி அம்புட்டு பேரையும் கைதட்ட வைக்கணும்னே"
"இது போன்ற திறமை இருந்தும்,வாய்ப்பு கிடைக்காத அத்தனை காப்பக குழந்தைகளுக்குமான ஒரு மேடை"
#ஹைக்கூ - காப்பக குழந்தைகளுக்கான கலைவிழா 
தேதி: 📅13/08/2016, சனி
நேரம் :  பகல் 3:00 முதல் மேடை நிகழ்வு
 காலை 11:00 முதல் OFF-STAGE நிகழ்வுகள்
இடம் : 🏬அசல் மலபார் ஹால், அவனியாபுரம்,
மதுரை.
தொடர்பு : 9677983570, 9865427756
அனைவரும் வருக !

‪#‎ஹைக்கூ‬ ‪#‎படிக்கட்டுகள்

கடந்த நான்கு வருடங்களாக #படிக்கட்டுகள் அமைப்பின் மூலம் 20-க்கும் மேற்பட்ட காப்பங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடந்து வந்திருக்கிறோம்.
அனைத்து குழந்தைகளும் ஏதோ ஒரு வகையில் பெற்றோர்களால்,உறவினர்களால் தனிமைப் படுத்தப்பட்டு.ஒதுக்கி வைக்கப்பட்டு, காப்பங்களில் தம் வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள்!
தாய்-தந்தை இழந்தோர்,கைவிடப்பட்ட குழந்தைகள், சிறைக்கைதிகளின் குழந்தைகள்,தெருவோரக் குழந்தைகள், மன-நலம் பிறழ்ந்த குழந்தைகள்,பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகள் என பதிவிடக் கூடாத பின்புலத்தில் இருந்து எல்லாம் இன்னும் எவ்வளவோ....
அனைவரும் குழந்தைகள் !
புன்னகை பதித்த முகங்களை மட்டுமே தன் அடையாளங்களாகக் கொண்டிருப்பவர்கள்!
பற்பல நல்ல உள்ளங்களின் உதவியாலும்,
அரசாங்கத்தின் சில நல்ல திட்டங்கள் மூலமாகவும்,
தன் சுயவாழ்வை துறந்து சமூகப் பணிகளில் ஈடுபடும் நிஜ சமூகசேவகர்கள் தயவிலும்,
அனைத்து குழந்தைகளும்
படிக்கிறார்கள்! மூன்று வேலையும் சாப்பிடுகிறார்கள்! பாதுகாப்பாக உணர்கிறார்கள்!
உறவாகவும்,தோழாமைக்காகவும் நிறைய்ய நிறைய்ய இளைஞர்களும், தன்னார்வலர்களும் இருக்கிறார்கள் 
விஷயத்துக்கு வருவோம் 
கடந்த நான்கு வருடங்களில்,
பயணித்து வந்த 1000 குழந்தைகளில்,
எத்தனையோ சூப்பர் சிங்கர்களையும்,கலக்கல் டான்சர்களையும் பார்த்து வந்திருக்கிறோம்!
மிமிக்ரி,ஓவியம்,தனி நடிப்பு,மைம்,ஆடல்,பாடல் என பற்பல திறமைகளை கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தையின் அரங்கேற்றவேளை எல்லாம் கொடையாளர்களும்,தன்னார்வலர்களும், வந்து போகும் அந்த ஒரு சில வேளைகளில் தான்!
அன்றைய தினம்,அவர்களுக்கு நம் கரகோஷங்கள் தான் உணவே!
ஓப்பனாகவே சொல்கிறோம்...
"என் பையனையும் யோகா கிளாஸ் அனுப்புறேன்..ஒண்ணும் சரி வரல.."
"என் பொண்ணும் டான்ஸ்கிளாஸ் போறா...எக்ஸ்ப்ரெஷன் கூட வரல"
ஆனா இந்த அனாதை ஆசிரமத்துல இருக்குற புள்ளைங்களை பாரேன்" என பொறமை கூட கொண்டார்கள் வந்து போன சிலர்..
அப்பொழுது தட்டியது இந்த ஐடியா!
சிலருக்கு மட்டுமே தெரிந்த இந்த காப்பக குழந்தைகளின் தனித் திறமைகள் எல்லாருக்கும் தெரியட்டுமே!
வசதி படைத்தவர்களுக்கும், சூப்பர் சிங்கர்களுக்கும்,சன் சிங்கர்களுக்கும் மட்டும் தான் மேடையா ? பாராட்டா ? பரிசா ?
காப்பங்களில் வளர்க்கப்பட்ட குழந்தைகளும் எதற்கும் சலித்தவர் இல்லை என உலகம் அறிய, ஊர் அறிய
அனைத்து நண்பர்கள் உதவியுடன்
#படிக்கட்டுகள்
கொண்டாடுகிறது
#ஹைக்கூ - காப்பக குழந்தைகளின் கலைநிகழ்ச்சி
‪#‎மதுரையில்‬ ‪#‎ஆகஸ்ட்13‬ ‪#‎சனிக்கிழமை_மாலை‬
ஆதரவற்றோரை அரவணைப்போம்!!!  கொண்டாடுவோம்!!!உயர்த்துவோம் 

‪#‎ஹைக்கூ‬ ‪#‎படிக்கட்டுகள்‬








வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் 13 காப்பக குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணர
ஒரு கலைவிழா எடுக்கிறோம் படிக்கட்டுகள்.

நிகழ்வின் பெயர் "ஹைக்கூ"வழக்கமாக காப்பக குழந்தைகளுக்கு அரிசி தேவை,உணவு,பாடப்புத்தகம், நோட்டு தேவைகள்,
கல்வி உதவி என்று பதிவிடுவோம்..
நண்பர்களும்,படிக்கட்டுகள் உறுப்பினர்களும் தம்மால் இயன்ற உதவிகளை செய்வார்கள்!
இந்த ஹைக்கூ நிகழ்விற்கு எவ்வாறு உதவுவது என்ன தேவை என்றெல்லாம் தொடர்ந்து மெயில் மற்றும் குறுஞ்செய்திகளில் நண்பர்கள் விசாரித்த வண்ணம் உள்ளனர்!
அனைவருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள்!
இந்த முறை அவர்கள் வேண்டுவதெல்லாம் அரிசியோ,பணமோ,கல்வி உதவியோ வேறு எதுவோ அல்ல!
இதுநாள் வரையில் திறமை இருந்தும் மேடைஏறிடாத அந்த பிஞ்சு உள்ளங்களுக்கு கரகோஷமும்,நாம் கொடுக்கும் உற்சாகமும் தான் தேவை 
நிகழ்விற்கு தாங்கள் வருவதே பெரிய உதவியாய் இருக்கும் 
வெளியூர் அன்பர்கள்,வர இயலாத நண்பர்கள் உதவ விரும்பினால் கீழ்கண்டவற்றுள் ஏதாவது ஒன்று செய்யலாம்!
1.காப்பக குழந்தையின் தனித்திறமை சார்ந்த பாட்டு கிளாஸ்,டான்ஸ்கிளாஸ்,ஓவியப்பயிற்சி உள்ளிட்ட கலைகளுக்கு உண்டான வருங்கால பயிற்சி கட்டணத்தை ஏற்கலாம்!
2.நிகழ்வின் உணவு ஏற்பாடுகளுக்கு, சிற்றுண்டிகளுக்கு உதவலாம்
3.பிஸ்கட்,ஸ்கெட்ச்,கலர்,பலூன்,சாக்லேட் என நிகழ்வில் குழந்தைகளுக்கு தேவைப்படும் பொருட்கள் வாங்க உதவலாம்..
இந்த முயற்சிக்கான ஒரு சிறு பங்களிப்பை கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்தலாம்!
Padikkattugal Bank Details :
Acc name : Padikkattugal
Bank name : State bank of India
Branch : SME branch,Madurai
Acc no : 32727449205
Ifsc code : SBIN0000988
Acc type : Savings Account
நிகழ்வின் முழு விபரங்களும்,புகைப்படங்களும்,பில் ரசீதுகளும் நிரூபணமாக மெயிலில் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும்.முகநூல் பக்கத்திலும் பதிவேற்றப்படும்...
உங்கள் விருப்பத்தை padikkattugal@gmail.com க்கு மின்னஞ்சல் செய்யலாம்!
ஆதரவற்றோரை அரவணைப்போம் 😊
தொடர்புக்கு : 9677983570,8438280058

Tuesday 11 December 2012





“படிக்கட்டுகள்” தற்போதைய நிலை

1.அரசாங்க அனுமதி பெற்று,”படிக்கட்டுகள்” என்ற பெயரில் பதிவு செய்துவிட்டோம்! பதிவு எண் : 311/2012

2.அன்பகம் சிறப்பு பள்ளி,சிறப்பு இல்லம்,அபோடு ஆதரவற்றோர் இல்லம்,மேலூர் கலைக்கல்லூரி(பார்வையற்றோர்),பாரதி முதியோர் இல்லம்,தமிழ்நாடு கல்ச்சுரல் அகாடமி ட்ரஸ்ட் முதலியவர்களோடு இணைந்து கடந்த எட்டு மாதங்களாக உதவிகள் செய்து இருக்கிறோம்.செய்துகொண்டும் வருகிறோம்..

3.இரத்த தானம்,ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்வி முன்னேற்ற நிகழ்வு,நடன பயிற்சிகள்,சிறப்பு வகுப்புகள்,கண் தெரியாதோருக்கு தேர்வு எழுதி தருவது என பணம் சாரா சேவைகளும் செய்து வந்து இருக்கிறோம்..

4.தற்போதைக்கு சில உறுப்பினர்களும்,வெகு சில கல்லூரி மாணவர்களும் மட்டுமே இருக்கும் இந்த படிக்கட்டுகள் அமைப்பில் இன்னும் மாணவர்களையும்,உறுப்பினர்களையும் சேர்க்க இருக்கிறோம்! அனைவரும் ஒன்று சேர்ந்து கைகோர்த்து ஆதரவற்றோர் என்ற சொல்லையே அகராதியில் இருந்து நீக்க முயற்சிப்போம்!..

5.2012-இல் கல்லூரி படிப்பை முடித்த மாணவர்கள் ஒவ்வொருவரும் சேர்ந்தே இந்த படிக்கட்டுகளை உருவாக்கி இருக்கிறோம்! இது தனிப்பட்ட ஒருவரின் அமைப்பு கிடையாது என்பதை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் இதில் இணைய வேண்டுகிறோம்

Wednesday 5 December 2012

படிக்கட்டுகள் மாணவர்கள்


ஆதரவற்றோர்களுக்கு உதவ வேண்டும்,ஏழை குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க வேண்டும், சமூகத்தில் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவரின் அமைப்பு தான் இந்த படிக்கட்டுகள்! 2012-ல் கல்லூரி படிப்பை முடித்து, பணிக்கு சென்று கொண்டிருக்கும்,பணிக்கு செல்லவிருக்கும் நண்பர்களும்,கல்லூரி படித்துகொண்டிருக்கும் கல்லூரி மாணவர்களும் ஒருங்கிணைந்து தோற்றுவித்ததே இந்த படிக்கட்டுகள்.
TCS,INFOSYS,IBM,HCL,WIPRO,CTS,ZOHO,ACCENTURE,NOKIA,HTC ETC.. உள்ளிட்ட  மல்டி நேஷனல் கம்பெனிகளில் பணிபுரியும் சாப்டுவேர் இன்ஜினியர்கள்,அலுவலக பணியாளர்கள்,காலேஜ் ப்ரோபாசர்கள்,சுயதொழில் செய்பவர்கள்,பத்திரிக்கை நண்பர்கள்,கல்லூரி மாணவர்கள் என ஒட்டு மொத்த வேகம் கலந்த இளமை பட்டாளமும்,விவேகம் கலந்த முதுமை பட்டாளமுமே இந்த படிக்கட்டுகளின் ஒவ்வொரு செங்கல்கள்! நீங்களும்,உம் நண்பர்களும்,அவர்களின் நண்பர்களும் என இன்னமும் படிக்கட்டுகளை பலப்படுத்த இதில் சேரலாம்! ஆதரவற்றவற்றோர்க்கு உதவும் எண்ணம் ஒன்று மட்டுமே அதற்கான தகுதி!...

ஆதரவற்றோர்க்கு உதவ விருப்பம் உள்ளவர்கள் நம் படிக்கட்டுகள் அமைப்பில் இரு வகையில் இணைந்து உதவலாம்..

1
.ஒன்று உறுப்பினராக இணைந்து.(MEMBER)

2.
மற்றொன்று தன்னார்வலராக(VOLUNTEER)-ஆக இணைந்து.

ட்ரஸ்ட்டில் இணைய விருப்பம் உள்ளவர்கள் இந்த முகநூல் க்ரூப்பில் இணையலாம்! 

இந்த இணையதளத்தில் ரிஜிஸ்டர் செய்யலாம்

நமது முகநூல் பக்கம்

இந்த எண்ணுக்கு அழைக்கலாம்!
மலைச்சாமி 9865427756, கிஷோர்குமார் 9677983570 ,பிரவீன் 9952221907, நிவாஸ் 9787834440, ராம் கணேஷ் 9629751918, மனோஜ் 9894717080,

இதற்கு மெயில் செய்யலாம்! padikkattugal@gmail.com


குறிப்பு :

(ல்லூரி மாணவர்கள் சந்தா தர தேவை இல்லை! ஆனால் மாணவர்கள் சேவை பணிகள் செய்ய வேண்டி இருக்கும்! ட்ரஸ்ட்டின் பக்க பலமே படிக்கும் மாணவர்கள் தான் என்பதை கருத்தில் கொள்க..

பணியில் இருப்பவர்கள் மாதம் குறைந்தபட்சம்  100 செலுத்த வேண்டும்! நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு காட்டப்படும்..12A,80-G சர்டிபிகேட் மூலம் நீங்கள் வரி விலக்கும் பெற்று கொள்ளலாம்!

பணம் தர இயலாது! முடிந்தால் தருகிறேன்..ஆனால் சேவை செய்ய விருப்பம் உண்டு என்று நினைப்பவர்களும் தாரளமாக இலவசமாக இதில் இணையலாம்..)